கரூர், ஜூன் 3 - கரூர் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 358 அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 804 காவல் துறையினர் ஈடு படவுள்ளனர். வாக்கு எண்ணும் மை யத்திற்கு மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தெரி வித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவ லக கூட்டரங்கில் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர் களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் முன் னிலையில் திங்களன்று நடைபெற்றது. இதுகுறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தெரிவித்ததாவது: கரூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணும் பணி ஜூன் 4 (செவ்வாய்கிழமை) அன்று காலை 8 மணிக்கு எம்.குமாரா சாமி பொறியியல் கல்லூரி வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் துவங்கப்பட வுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு கரூர் மக்களவைத் தொகுதிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி யில் 358 அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 804 காவல் துறையினர் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்ற டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி திங்களன்று நடத்தப் பட்டது. குறிப்பாக, கரூர் மக்கள வைத் தொகுதிக்குட்பட்ட கரூர் சட்ட மன்ற தொகுதியில் 269 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 20 சுற்றுகளாகவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 260 வாக்குச்சாவடி களில் பதிவான வாக்குகள் 14 மேஜை களில் 19 சுற்றுகளாகவும், அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 19 சுற்று களாகவும், மணப்பாறை சட்ட மன்றத் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 24 சுற்றுகளாக வும், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 255 வாக்குச்சாவடி களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 19 சுற்றுகளாகவும் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 309 வாக்குச்சாவடி களில் பதிவான வாக்குகள் 14 மேஜை களில் 23 சுற்றுகளாகவும் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தபால் வாக்குகள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணி யில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் என மொத்தம் 7,708 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணுவ தற்கென 8 மேஜைகள் அமைக்கப் பட்டுள்ளன. தபால் வாக்குகள் எண் ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு வாக்குகள் எண்ணும் மேற்பார்வை யாளர், 2 வாக்குகள் எண்ணும் உதவி யாளர்கள் மற்றும் ஒரு நுண்பார்வை யாளர் என தலா 5 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் தேர்த லில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தலா ஒரு முகவர்களை நியமித்துக் கொள்ளலாம். ஒரு சுற்றுக்கு ஒவ் வொரு மேஜைக்கும் தலா 500 தபால் வாக்குகள் வழங்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக எண்ணப்படும். வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைப்பேசி, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ள எந்தப் பொருட் களையும் எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக் கையில் பங்கேற்பதற்காக நியமிக்கப் பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு அடையாள அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு அடையாள அட்டை வைத்திருப்ப வர்கள் வாக்கு எண்ணிக்கை மையங் களில் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் தபால் வாக்குகளில் உள்ள படிவங்களை முறையாக ஆய்வு செய்வது குறித்தும், தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்பட்டுள்ள படி வங்களை முறையாக பூர்த்தி செய் திடவும். தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதல்களை முறையாக பின் பற்றி பணியாற்றிடவும் இப்பயிற்சி யில் உரிய அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கரூர், தளவாய்பா ளையத்தில் வாக்கு எண்ணிக் கைக்கு தயாராக உள்ள எம்.குமார சாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் ஆகி யோர் திங்களன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.