districts

திருச்சி முக்கிய செய்திகள்

நவ.14-இல் நூலக வார  விழா போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை, நவ. 11 - புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நவ.14 ஆம் தேதி முதல் 57 ஆவது  தேசிய நூலக வார விழா போட்டிகள் தொடங்கவுள்ளன.  இதுகுறித்து வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நவ. 14 அன்று (வியாழக்கிழமை) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘அறிவுத் தோட்டம்’ என்ற  தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறும். வரைவ தற்கான பொருட்களை எடுத்து வர வேண்டும். தாள் நூல கத்தில் வழங்கப்படும். நவ.16 (சனிக்கிழமை) அன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனக்குப் பிடித்த புத்தகம்’ என்ற  தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெறும். 5 நிமிடம் பேச வேண்டும். அன்று மாலை, ‘வாசிப்பு என்ன செய்யும்’  என்ற தலைப்பில் நடைபெறும் சிற்றுரை அரங்கில் வாச கர்கள், பொதுமக்கள் பங்கேற்றுப் பேசலாம். நவ.17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று படம் பார்த்து கதை  எழுதும் போட்டி நடைபெறும். பொதுமக்கள், ஆர்வ லர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற் கலாம். நவ.18 (திங்கள்கிழமை) அன்று கல்லூரி மாண வர்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெறும். நவ. 19  (செவ்வாய்க்கிழமை) அன்று பொதுமக்கள், மாணவர்கள்  பங்கேற்கும் ‘நூலகம் பேசுகிறது’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெறும். நவ.20 (புதன்கிழமை) அன்று புதுக்கோட்டை சிறையில், ‘புத்தகம் தந்த புத்து ணர்ச்சி’ என்ற தலைப்பில் இல்லவாசிகள் பேசும் உரை யரங்கம் நடைபெறும். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு சான்றிதழ், பரிசு, கேடயம் வழங்கப்படும். மேலும் விவ ரங்களுக்கு 99657 48300, 94431 26025 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட திட்டக் குழுவால்  எந்த பலனும் இல்லை! கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அரியலூர், நவ.11 - மாவட்ட திட்டக் குழுவால் எந்த பலனும் இல்லை என்று  மாவட்ட ஊராட்சிகள் குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டி னர். அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பதவிக் காலம் 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதை யொட்டி நடைபெற்ற இறுதிக் கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அசோகன், செயலர் தங்கம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும், உருவாக்கப் பட்ட மாவட்ட திட்டக் குழுவால், மாவட்டத்தில் எந்தவித  வளர்ச்சித் திட்டப் பணிகளும் செயல்படுத்தப்படவில்லை என்றும், இந்த குழுவால் மாவட்டத்துக்கு எந்த பலனும்  இல்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகை யிலைப் பொருட்கள் அரியலூர் மாவட்டத்தில் தாராளமாக  புழக்கத்தில் உள்ளன. இதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பிரிங்கியத்தில் மிகவும் குறுகிய  பகுதி சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் லாரிகளால்  விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவ டிக்கை இல்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவ.15 வெண்ணைமலையில்  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர், நவ.11 - கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  இணைந்து நவ.15 அன்று தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை வெண்ணைமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை நடத்தவுள்ளன.  இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ,  ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனை வரும் கலந்து கொள்ளலாம். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளை ஞர்கள் தங்களுடைய சுய விவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து  கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளை ஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499055912 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

பெரம்பலூர், நவ.11 - தாய் மற்றும் அண்ணனிடமிருந்து தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். பெரம்பலூர் அருகேயுள்ள எசனை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், செண்பகராமன் (34), ஸ்ரீதரன் (30) ஆகிய மகன்களும் உள்ளனர். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் டெலிபோன் மெக்கானிக்காக பணிபுரிந்த செல்லையா கடந்த 2012 இல் ஓய்வு பெற்றுள்ளார்.  அப்போது, ஓய்வூதியமாக ரூ.18 லட்சமும், அரியர் பணமாக ரூ.17.50 லட்சமும் கிடைத்துள்ளது. இத்தொகையை ஸ்ரீதரனுக்கு பிரித்து கொடுக்காமல், மல்லிகாவும், செண்பகராமனும் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஸ்ரீதரன், தனது தாய் மற்றும் சகோதரனிடம் தனக்கு கொடுக்க வேண்டிய தொகையை வழங்க கோரி பலமுறை கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.  இதனால், மனமுடைந்த அவர், தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத் தரக் கோரியும், தன்னை ஏமாற்றிய தாய் மற்றும் சகோதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஸ்ரீதரன் தனது உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஸ்ரீதரனை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.