திருவாரூர், ஜூலை 31 - இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 26, 27, 28 தேதி களில் திருவாரூர் மாவட்டத்தில் நடை பெற உள்ளது. இதற்காக சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் வர வேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் ப.ஆனந்த் வர வேற்புக் குழு செயலாளராக மாநாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வரு கிறார். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வண்ணமயமான சுவர் விளம் பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாணவர் சங்க நிர்வாகிகளைக் கொண்ட பல்வேறு குழுக்கள் பேருந்து, ரயில் நிலையம், கடைவீதிகள், வர்த்தக நிறுவனங்களில் மாநாட்டுக்கான நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு தோழமை அரங்கங்களும் தீவிர நிதி வசூலில் ஈடுபட்டு வரு கிறார்கள். மேலும் மாநாட்டை விளம்பரப் படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனொரு பகுதியாக சனிக்கிழமை, திருவாரூர் காசீஸ் இன் ஹோட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் கருத்துரையாற்றினார். இதில் சிஐடியு, தனி அரங்கங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டு நிதி வழங்கப்பட்டது.