districts

ஜன.20 திருவாரூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

திருவாரூர், ஜன.7 - பிப்ரவரி 23, 24 தேதிகளில் மத்தியில் ஆளும் நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில  இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெற வுள்ளது.  இப்போராட்டத்தை திருவாரூர் மாவட்டத் தில் வெற்றிகரமாக நடத்திட மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டம் திருவாரூர் சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி 20 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த  மாநாட்டை நடத்துவதென முடிவு செய்யப்பட் டது.  தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் வி.குருநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு நிர்வாகி கள் ஆர்.மாலதி, டி.முருகையன், ஏஐடியுசி சார்பில் ஜே.குணசேகரன், ஆர்.சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஜனவரி 26 குடியரசு தினத்தன்று புதிய  ரயில் நிலையம் அருகில் தேசிய கொடியேற்றி  உறுதிமொழி ஏற்பதில் தொடங்கி பிப்ரவரி 23  ஆம் தேதி வரை பல்வேறு தொடர் பிரச்சாரங் கள், ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சந்திப்பு ஆகிய வற்றை நடத்தி பிப்ரவரி 24 ஆம் தேதி மறிய லில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.