districts

img

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பங்கள் ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

குடவாசல், ஜூலை 8 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், பெருந்தரக்குடி கிராமத்தில் 1600 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்த ஊராட்சியில் 9 ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியில் உள்ளனர். ஊராட்சி கிராமப் பகுதியில் வடக்குவெளி, கீரங்கோட்டம் மாரியம்மன் கோவில் தெரு, சார்வன், வெள்ளக்குடி ஆகிய பகுதிகளில் மிக மோசமான முறை யில் பராமரிப்பின்றி எந்த நேரத்திலும் கீழே  விழும் நிலையில் மின் கம்பங்கள் உள்ளன. இதேபோல் ஒட்டக்குடி, சார்வன்,  பெருந்தரக்குடி, குளிக்கரை மாரியம்மன் கோவில் சாலை பகுதிகளில் மின் கம்பி வடம் மிகவும் தாழ்வாக உள்ளது. வருகின்ற காற்று மற்றும் பருவமழை காலங் ்களை கவனத்தில் கொண்டு, தாழ்வாக செல்லும் மின்கம்பி வடங்களையும், சேத மடைந்துள்ள மின் கம்பங்களையும் விபத்து  ஏற்படும் முன்பாக சீர்செய்ய  வேண்டும்.  பொதுமக்களின் பொதுவான கோரிக்கை யான சுகாதாரமான குடிநீர், சாலை வசதி  மற்றும் தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட வற்றை பூர்த்தி செய்வது ஊராட்சி மன்ற  பிரதி நிதிகளின் கடமையாகும்.  எனவே மாவட்ட ஆட்சியர் பெருந்தரக் குடி ஊராட்சியில் நேரடியாக கள ஆய்வு செய்து, எந்த நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்தை உண்டாக்கும் வகையில் உள்ள மின் கம்பங்கள், கம்பி வடங்களை சீர் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணனை சந்தித்து ஊராட்சி மன்றம் சார்பாக கேட்ட போது, “ஊராட்சி மன்ற நிதியில் பல்வேறு அடிப்படை  பணிகளுக்கு இடையே முதல் கட்டமாக 20  மின் கம்பங்களை ஊராட்சி நிதியில் சீர மைத்து உள்ளோம். மேலும் 20-க்கும்  மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளன. இதனை சீர் செய்ய ஊராட்சி நிர்வாகத்தில் நிதி இல்லை. மேலும் ஒட்டக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அடிக்கடி மின்தடை உள்ளது. மாவட்ட மின்சார அலுவலகத்தில் பல முறை ஊராட்சி மன்றத்தின் சார்பாக புகார்  அளித்தும்  இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து நிதி ஒதுக்கி  உடனே பணிகளை தொடங்க வேண்டும் என்பதே ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்  மக்களின் கோரிக்கையாகும்” என்றார்.