நீடாமங்கலம், ஏப்.21 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் நீடா மங்கலம் ஒன்றிய குழு சார்பாக பெரியார் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.பி. கிஷோர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஏ.அருண்குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தை கட்சியின் மாவட்ட செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து உரை யாற்றினார். அப்போது, வருவாய் வட்ட தலைநகரான நீடாமங்கலத்திலும் சுற்றுப்புற கிராமங்களிலும் வசிக்கும் ஏழை குடும்பத் தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அரசு மேல்நிலைப் பள்ளியும் அதன் மூலம் இலவச கல்வியும் இதுவரை கிடைக்கவில்லை. நீடா மங்கலத்தில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தாமதம் செய்யாமல் தரம் உயர்த்த வேண்டும் என்றார். போராட்டத்தை வாழ்த்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ். கலியபெருமாள், பி.கந்தசாமி, ஒன்றியச் செய லாளர் டி.ஜான்கென்னடி, விதொச செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உரையாற்றி னர். மாவட்ட பொருளாளர் ஏ.கே.வேலவன் முடித்து வைத்தார்.