திருவண்ணாமலை, ஜூன் 1- பொதுபோக்குவரத்திற்கு அரணாக விளங்கும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. ஆட்டோ சங்கத்தின் 7ஆவது திருவண்ணாமலை மாவட்ட மாநாடு போளூரில் ஆர்.கருணாமூர்த்தி, என்.வெங்கடேசன் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலு சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் இரா.பாரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அல்டாப்கான் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.காங்கேயன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.சரவணன் வேலை அறிக்கையை யும், பொருளாளர் எம்.முபாரக் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். போக்குவரத்து மண்டலச் செயலாளர் எ.சேகரன், சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன், சிஐடியு நிர்வாகி எம்.வீரபத்திரன், வழக்கறிஞர்கள் எஸ்.அபிராமன், எம்.ஜெயபாலன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.தண்டபாணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து ஆட்டோ சங்க சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி பேசினார். முன்னதாக டி.யுவராஜ் வரவேற்றார். என்.பிரம்மா நன்றி கூறினார்.
தீர்மனங்கள்
எப்.சி. தாமதக் கட்டணம் தினசரி விதிப்பதை திரும்பப்பெற வேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், ஆன்லைன் நலவாரிய குறைபாடு களை கலைய வேண்டும், 5 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.சிவக்குமார், செயலாளராக கே.சரவணன், பொருளாளராக ஜி.வேலு உள்ளிட்ட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.