districts

img

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள்

திருவண்ணாமலை, மார்ச் 12- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 திங்க ளன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 ஆம் தேதி வரைக்கும் நடைபெறுகிறது. அதன்ஒருபகுதியாக வட மாவட்டங்களான விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் கல்வி மாவட்டத்தில் 47, விழுப்புரத்தில் 54 என மொத்தமாக 101 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 189 பள்ளிகளை சேர்ந்த 11,623 மாணவர்களும், 11,451 மாணவி களும் மொத்தம் 23,074 தேர்வு எழுதுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 81 மையங்களில் 16,970 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  இம்மாவட்டத்துக்கான வினாத்தாள் 6 இடங்களில் தனித்தனி அறை களில் வைத்து பூட்டி சீல் வைத்துள்ள னர். மேலும் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  தேர்வு மையங்களை கண்காணிக்க 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். தேர்வு விதிமுறைகளை மீறுவோரையும், ஆள்மாறாட்டத்தை கண்டறிய வும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 89 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  அதைத்தவிர மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலை மையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 467 மாணவர்களும், 15 ஆயிரத்து 481 மாணவிகளும் என 30 ஆயிரத்து 948 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவர்க ளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்க ளிலும் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளது.