districts

img

பெத்தக்குப்பத்தில் திறக்கப்படாத பள்ளிக் கட்டடம்: பரிதவிக்கும் தலித் மாணவர்கள்

திருவள்ளூர், அக் 8- பெத்திக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள புதிய் பள்ளிக் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளிக்கு ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது. இதனால் இடை நிற்றல் அதிகரித்தது. இதனை தவிர்க்க ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகிலேயே பள்ளிக் கூடம் அமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பு கள் வலியுறுத்தி வந்தன. இதனை யடுத்து, 2018 ஆம் ஆண்டில் ஆதி திராவிடர் குடியிருப்பு அருகிலேயே பள்ளிக் கட்டிடம் அமைக்க அதி காரிகள் ஒப்புதல் அளித்தனர். இதற்காக 50 சென்ட் நிலமும் ஒதுக்கி கொடுத்தனர்அதிமுக ஆட்சியின்போது ரூ.14.54 லட்சத் தில் புதிதாக கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது. அதன்பிறகு ஆட்சி மாறி யது. ஆனாலும், அந்தக் கட்டி டம் இன்றுவரை திறக்கப்பட வில்லை. இதனால் புதிய பள்ளி கட்டி டத்தில் மது அருந்துதல் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து வட்டார கல்வி அலு வலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பள்ளிக்கு ஒதுக்கிய நிலத்தையும் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கிராமசபை கூட்டங்களில் பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ப.லோகநாதன் கூறுகை யில், “மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளிக் கட்டடத்தை திறக்க வேண்டும், கூடுதலாக ஆசி ரியர்களை நியமிக்க வேண்டும், மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தித் தர வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.