திருவள்ளூர் ஆக 31- பழங்குடி இன மக்கள் வாழும் வாழ வந்தான்கோட்டையை சுற்றி எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவர் வரும் 6ஆம் தேதி அகற்றப்படும் என ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் உறுதிய ளித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை யில் 75.கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் தங்கள் குடும்பத்து டன் கடந்த 50 ஆண்டு களாக வசிக்கின்றனர்.இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி பாஸ்கரா அவென்யூ என்கிற தனியார் மனைபிரிவு நிர்வாகம், 10 அடி உயரத்திற்கு பொது இடத்தில் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளது. இந்த சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு கள் சார்பில் ஊத்துக் கோட்டை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் சுவரை அகற்ற வேண்டும் என வலி யுறுத்தி செப்டம்பர் 8 அன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்று கையிடுவது என தீர்மானித்து அதிகாரிகளுக்கு உரிய முறையில் போராட்டம் குறித்து தகவல் தெரி விக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 30 அன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அருண்குமார் தலைவர்களை அழைத்து பேசினார். பேச்சுவார்த்தையின் முடிவில் செப்டம்பர் 6 ஆம்தேதி தீண்டாமை சுவர் அகற்றப்படும் என வட்டாட்சியர் அருண் குமார் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். இதில் ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏழு மலை, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசன், பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முருகன், தமிழ்நாடு.தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், மாவட்டச் செயலாளர் த.கன்னி யப்பன், மாவட்ட துணைத் நிர்வாகிகள் சுதாகர், நரசிம்மன், பிரகாஷ், சீத்தஞ்சேரி சிபிஎம் கிளைச் செயலாளர் முரளி உட்பட பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டனர்.