திருவள்ளூர் அருகில் உள்ள பழைய திருப்பாச்சூர் ஊராட்சியில் வசந்த நகர் இருளர் இன காலனியில் திங்களன்று (செப் 26) தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்கப்பட்டது. கிளை தலைவராக கே.வெங்கடேசன், செயலாளராக வி.சூரியா, பொருளாளராக எஸ்.மஞ்சு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அற்புதம், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.