திருவள்ளூர், பிப் 15- மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்கு மாறு பொதுமக்கள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் நகராட்சி 4ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.உதயநிலா, 3ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளா குப்பன், 5ஆவது வார்டில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் கோமதி பாலசுப்பிரமணியம், 7ஆவது வார்டில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் தெய்வசிகாமணி, 8ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாந்தி கோபி ஆகியோரை ஆதரித்து அ.சவுந்தரராசன் திங்க ளன்று (பிப்.14) தீவிர பிரச்சாரத்தில் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகை யில், திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலே நடத் தப்படவில்லை. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்து விட்டால் கொள்ளை யடிக்க முடியாது என்பதால், அதிகாரிகளின் துணையுடன் மிகப்பெரிய கொள்ளையை ஆட்சியாளர்களே நடத்தி னர். கடந்த 5 ஆண்டு காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி மிகப்பெரிய செல்வந்தராக மாறியுள்ளார். வேலுமணிக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்? மக்களுக்கு சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றா மல், மக்கள் பணத்தை கொள் ளையடித்து பெரும் பணக்காரராக மாறியுள்ளார். திருவள்ளூர் நகராட்சி, மாநகராட்சி அளவிற்கு தரம் உயர, மக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்ற, சட்ட மன்ற தேர்தலில் வாக்களித்தது போல, நகராட்சி தேர்தலி லும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, இ.மோ கனா, மாவட்டக் குழு உறுப் பினர்கள் என்.கீதா, இ.எழிலர சன், நகர் மன்ற முன்னாள் தலைவர் இராசகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி யின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.