திருவள்ளூர், ஆக 25- இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம் என்ற முழக்கத்து டன் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியில் மேட்டுக்குப்பம் பகுதியிலிருந்து பைக் பிரச்சாரம் பயணம் வியா ழனன்று (ஆக 25) துவங்கி யது. இந்த பிரச்சார பய ணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் துவக்கி வைத்து பேசினார்.எளாவூர், பூவலை, தோக்க மூர், ஆரம்பாக்கம், நத்தம், மங்காவரம், ராஜாபாளை யம், அப்பாவரம் உட்பட பல இடங்களில் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் வட்டச் செயலா ளர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை வட்டம், மாளந்தூர், மாமண் டூர், ஆவாஜிபேட்டை உட்பட பல இடங்களில் கடும் மழையிலும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோழவரம் அருகில் உள்ள ஞாயிறு கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் ஒன்றிய செய லாளர் ஜி.வி.எல்லையன், மாவட்டக் குழு உறுப்பினர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.