districts

img

பெண்கள், திருநங்கைகளுக்கு  அரசு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர், நவ 16-  திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர், புதனன்று (நவ 16) கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.  இதில் மாற்றுத்திறனாளிகள்,  மகளிர் சுய உதவி குழுக்கள், திருநங்கைகள், ஆதரவற்ற கைம்பெண்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 3009 பயனாளிகளுக்கு ரூ.20.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.nஜ. கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, இணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.