districts

img

பழவேற்காடு கடற்கரையில் தூய்மைபணி

திருவள்ளூர், பிப் 12- பழவேற்காட்டில் உள்ள கடற்கரை யினை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிறன்று (பிப்.12)  நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி இருப்பதால் இதனை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பழவேற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசி ரியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியை ஞாயிறன்று (பிப்.12) மேற்கொண்டனர்.  நெகிழி இல்லா திருவள்ளூர் மாவட்டம் எனும் மாவட்ட ஆட்சியர் திட்டத்தின் படி பழவேற்காடு கடற்கரை யில் குப்பைகளை சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என வும் கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கையொப்பமிட்ட சான்றிதழ்களை வழங்கப்பட்டனர்.  இதில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வ குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன்,சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாகூரான், ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் பக்ருதீன்,கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன், ஆசிரியர்கள் ராமன், ராஜா, தூயவன், ஆர்.பி.எஸ்.செந்தில்குமார், ரவிச்சந்திரன், மோகன்,மாவட்ட புத்தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த வினோத் குமார், ஸ்வேதா இந்துமதி, ரேவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.