districts

திருவள்ளூரில் ஆக்சிஜன் வசதியுடன் 1,379 படுக்கைகள் தயார்

திருவள்ளூர், ஜூன் 23-  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் புதனன்று  புதிதாக 49  பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 225 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதைதொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரு வள்ளூர்  அரசு மற்றும் தனி  யார்  மருத்துவமனை களில்  முன்னெச்சரிக்கை யாக 4 ஆயிரம் படுக்கை கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 1,379 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 2368 உள்ளன. அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253ஆம்  ஏற்படுத்தப்பட்டு இருக்கி றது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக் கைகள் மற்றும் தயார் நிலையில் உள்ள படுக்கை வசதிகளை மாவட்ட ஆட்சி யர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.