திருப்பூர், செப். 12 - சனாதன மற்றும் ஆபாச பேச்சுப் பேர்வழி மகாவிஷ்ணு வை அவிநாசி பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்த போலீசார் ஐந்து மணி நேரம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது, அறக்கட்ட ளை அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
சென்னை அசோக் நகர் பெண்கள் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையைப் பரப்பும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாச மாக பேசியதோடு, மாற்றுத் திறனாளி தமிழாசிரியரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில், மகாவிஷ்ணு என்பவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் 5 மணிநேரம் நடந்த விசாரணை
நீதிமன்ற காவலில் இருந்த மகாவிஷ்ணுவை தற்போது 3 நாட்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள போலீ சார், அவரை, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவரது பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு வியாழனன்று அழைத்து வந்தனர்.
இங்கு காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 3 மணி வரை மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்திய போலீசார், அறக்கட்டளையின் வங்கி பணப் பரிவர்த்தனை, நன் கொடையாளர்கள் விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள், 3 லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொ ருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வெளிநாடுக ளில் உள்ள அறக்கட்டளை கிளைகள், நிதி ஆதாரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகள், மாதர் சங்கத்தினர் போராட்டம்
பின்னர், ஆபாசப் பேச்சுப் பேர்வழி மகாவிஷ்ணுவை மீண்டும் சென்னைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.
முன்னதாக, மகாவிஷ்ணுவை பரம்பொருள் அறக்கட்ட ளைக்கு அழைத்து வருவதை அறிந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தினர் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் அறக்கட்ட ளையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.