districts

img

14 வயது சிறுவனை வேலை செய்ய கட்டாயப்படுத்திய தறி குடோன் உரிமையாளர்- சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அவிநாசியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 14 வயது சிறுவன் புகார் அளித்துள்ளார்.

அவிநாசியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு மனு பெற்று வந்தார்.

இந்த நிலையில் கருமத்தம்பட்டி அருகே குளத்துப்பாளையம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்மணி சின்ன குட்டி ( எ) சண்முகம் என்ற நபரிடம் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று பணி செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகேஸ்வரிக்கு காலில் கொப்பளப் பிரச்சனை காரணமாக, அவிநாசி அரசு மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து மகேஸ்வரி சிகிச்சையில் இருப்பதால், 14 வயது மகனை தறி குடோன் உரிமையாளர் சண்முகம் வேலைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து 14 வயது சிறுவன் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.