திருப்பத்தூர், நவ. 3- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வியாழனன்று (நவ. 3) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்க ளுக்கும், குடும்ப ஓய்வூதியர்க ளுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும், நிலுவைத் தொகையை பிடித்தமின்றி வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.12,000 ரூபாயும், கடைசி ஊதியத்தில் 50 விழுக்காடாகவும் வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. மாவட்டத் தலைவர் சா.ராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எ.ஞானசேகரன், பொருளாளர் ஆனந்தன் கார்மே கம், ரங்கன், சிஐடியு அமைப்பா ளர் கேசவன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி ரவி, சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி, செஞ்சி மணி ஆகியோர் பேசினர். அதேபோல் கடலூரிலும் அனைத்து துறை ஓய்வூதிய சங்கங் களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.