பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாகப் பேசி மதுகுடிக்க அழைத்த பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் மாணவியிடம் இரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசியது மட்டுமின்றி அவரை மது குடிக்க அழைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பேராசிரியர்கள் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கல்லூரி பேராசிரியர் ஜெபஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகவுள்ள பால்ராஜு என்பவரைத் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
இந்நிலையில் இரண்டு பேராசிரியர்களும் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.