தேனி, மார்ச் 1- வைகை அணையில் மீன்பிடி உரிமத்தை தனியா ருக்கு மாற்றும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையில் மீன்வளத்துறையின் மூலம் மீன்பிடி தொழில் நடத்தப்படு கிறது. இதில் வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மீனவர் கள் மீன்பிடித்து வருகின்ற னர். மீனவர்கள் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் அர சுக்கு வழங்கப்பட்டு, அரசு மூலம் நேரடியாக மீன்கள் குறைந்த விலையில் விற் பனை செய்யப்பட்டு வரு கிறது. இதுதவிர ஆயிரக்க ணக்கான வியாபாரிகளும் வைகை அணை மீன்களை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்ற னர். இந்நிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய் துள்ளது. இதற்கான ஏலம் வருகிற 8 ஆம் தேதி சென்னை மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வைகை அணை யின் மீன்பிடி உரிமத்தை கைப்பற்ற பல்வேறு தனி யார் நிறுவனங்கள் போட்டி யிடுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு வைகை அணையை மட்டுமே நம்பி யுள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீன்பிடி உரிமம் தனியா ருக்கு மாற்றப்பட்டால் தங் கள் வாழ்வாதாரம் அடி யோடு பாதிக்கப்படும் எனக் கூறி மீனவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை அணை மீன்வளத் துறை இயக்குனர் அலுவல கம் முன்பாக பிப்ரவரி 28 அன்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணை மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு மாற்றினால் மீனவர்கள் பாதிக்கப்படுவது டன் வைகை அணையை நம்பியுள்ள 5 மாவட்ட விவ சாயிகளும் பாதிக்கப்படு வார்கள் என்றும் கோஷமிட்ட னர். மேலும் தனியாருக்கு மாற்றுவதால் வைகை அணை தண்ணீர் முழுவதும் மாச டையும், இதனால் மதுரை மாநகர் உள்பட பல்வேறு பகு திகளில் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் வைகை அணையில் மீன்பிடி தொழிலை அரசே தொட ர்ந்து நடத்த வேண்டும் என் றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.