districts

போடிமெட்டு: தொடர் காட்டுத் தீ

தேனி, மார்ச் 4- தேனி மாவட்டம் போடி வனப்பகுதிகளில் அடுத்தடுத்து காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. வனத்துறையினரும் உடனுக்குடன் தீயை அணைத்து வருகின்றனர். சனிக்கிழ மையன்று அதிகாலை போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. புகையாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மலைச்சாலையில் சிரமப் பட்டனர்.  இதுகுறித்து போடி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.