கடமலைக்குண்டு, ஜுன் 1- தேனி மாவட்டம், கண்ட மனூர் கிராமத்தில் தேனி சாலை அருகே அமைக்கப் பட்டுள்ள சாக்கடை வடிகால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது. அதன் கார ணமாக தேனி சாலையில் பய ணிகள் நிழற்குடை அருகே கழிவுநீர் தேங்கத் தொடங்கி யது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்க ளும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் ஊராட்சி நிர்வாகம் சார் பில் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக தற்போது கழிவுநீர் சாலையில் குளம் போல தேங்கிக் காணப்படுகி றது. இதனால் அந்த பகுதி யில் கடும் துர்நாற்றம் ஏற் பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட் டுள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் பயணிகள் நிழற்குடையை தவிர்த்து விட்டு சாலையோரம் வெயி லில் நின்று பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் காரணமாக பைக் விபத்துகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப் பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகாலை சீரமைத்து கழிவு நீர் சாலையில் தேங்குவதை தடுக்க வேண்டும் என பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.