பாபநாசம், மார்ச் 7- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகா களில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பல் வேறு நெருக்கடிகளைச் சந்திப்பதாக புலம்புகின்றனர். பிரச்சனைகள் குறித்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது:- நெல் கொள்முதல் நிலையத்திற்குத் தேவையான சணல் எடுக்க நவீன அரிசி ஆலைக்குச் சென்றுவர ரூ 2,000- த்திற்கு மேல் செலவாகிறது. கொள்முதல் நிலை யத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என மூன்று பேர் மட்டுமே உள்ள னர். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிக ரிக்க வேண்டும். கடந்த பருவத்தில் விவ சாயிகள் கணினிமையத்தில் ஆன் லைனில் பதிவு செய்த பிறகு கொள்முதல் நிலையத் திற்கு வருவர். தற்போது பணியாளர் களே ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டி யுள்ளது. ஆன் லைனில் பதிவுச் செய்யும் போதே நெல் கொள்முதலும் செய்ய வேண் டும். ஆன் லைனில் பதிவு செய்தவுடன் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் ஒப்புதல் வழங்க தாமதமாகிறது. இதனால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது. தற்போது நெல் கொள்முதல் நிலை யங்களில் 80 சதவீத நெல் மூடைகள் சேத மாகிறது. கொள்முதல் செய்த மூட்டை கள் 48 மணி நேரத்தில் லாரிகள் மூலம் அனுப்ப வேண்டும் என விதி உள்ளது. ஆனால், வாரக்கணக்கில் மூடைகள் தேங்கி யுள்ளது. இதனால் ஏற்படும் எடையி ழப்பிற்கு யார் பணம் செலுத்துவது? லாரி ஓட்டுநர்கள் பணியாளர்களிடம் மாமூல் கேட்டு நிர்ப்பந்திக்கின்றனர். கடந்த பருவத்தில் லட்சக்கணக்கில் எடையிழப்பு ஏற்பட்டு அதைக் கட்ட முடி யாமல் பலர் வேலையிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்றனர்.