districts

img

திருஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவு குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூர், ஜன.20- தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் தலைமை வகித்தார். திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டங்களைச் சேர்ந்த வட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங் குடியில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து 53 நாட்களுக்கும் மேலாக ஆலை வாயில் முன்பு போராட்டம் நடத்தி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இந்த பிரச்சனையை தீர்க்க முன் வராத மாவட்ட நிர்வாகத்தையும், மாநில அரசையும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.  விச மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், விவசாயிகள் கோவி ந்தராஜ், ஏ.கே.ஆர்.ரவிச்சந்திரன், கக்கரை சுகுமாரன், பழனிச்சாமி, ஆம்பல் தங்கவேல், புண்ணியமூர்த்தி, எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து கோட்டாட்சியர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.