தஞ்சாவூர் ஆக. 14 - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), தலைமையிலான குழு வில், எம்எல்ஏக்கள், காதர் பாட்ஷா சா.முத்து ராமலிங்கம் (இராமநாதபுரம்), ஆ.கிருஷ்ண சாமி (பூந்தமல்லி), ஆ.தமிழரசி (மானா மதுரை), கோ.தளபதி (மதுரை வடக்கு), வி.பி. நாகைமாலி (கீழ்வேளூர்), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எஸ்.ஜெயக்குமார் (பெருந் துறை) ஆகியோர் தஞ்சாவூருக்கு வந்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமை வகித்து பேசுகையில், “நிலுவை யில் உள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, உடனடியாக அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில் ரூ.32,44,258-க்கான நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகளையும் வழங்கினர். முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறும், தஞ்சை ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவி யர் விடுதி கட்டுமானப் பணி, தஞ்சை மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள், கட்டடம், அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்குகள் மற்றும் ஸ்கேன் கருவியின் செயல் பாடுகள், தஞ்சாவூர் மாவட்ட மருந்து கிட்டங்கியில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு விவரம், நாஞ்சிக் கோட்டையில் ரூ.3.47 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலைய செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், தஞ்சாவூர் ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு சிறப்பு பணி அலுவலர் எம்.எல்.கே.ராஜா, கூடுதல் ஆட்சி யர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.