districts

img

மாநில அளவிலான பீச் வாலிபால்: அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு  

தஞ்சாவூர், செப்.23 -  தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புதன்கிழமை, கடற்கரை கையுந்து பந்து (பீச் வாலி பால்) போட்டி நடைபெற்றது.  இதில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10  ஆம் வகுப்பு மாணவி தீபிகா, 11 ஆம் வகுப்பு மாணவி  மதுபாலா ஆகியோர் கொண்ட அணி, மாவட்ட அளவில்  முதலிடம் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும், 14 வயதுக்கு  உட்பட்டோர் பிரிவில் 9 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி, மதுனிகா ஆகியோர் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்  பிடித்தனர்.  இந்நிலையில் கடற்கரை கையுந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு  தகுதி பெற்ற மாணவிகள் தீபிகா, மதுபாலா மற்றும் ஸ்ரீநிதி, மதுனிகா, விளையாட்டு பயிற்சியாளர்கள் நீல கண்டன், பாரதிதாசன் ஆகியோரை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் வியாழக் கிழமை பள்ளியில் ஆய்வுக்கு வந்திருந்த போது வாழ்த்து  தெரிவித்தார்.  அப்போது பள்ளி தலைமையாசிரியர் வீ.சாந்தி, உதவித் தலைமையாசிரியர் சுப.கார்த்திகேயன்,  உடற் கல்வி ஆசிரியர்கள் ஏ.ரெங்கேஸ்வரி, ம.அன்னமேரி ஆகி யோர் உடனிருந்தனர்.