குடவாசல், ஆக.5 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திருவாரூர் மாவட்ட 18 ஆவது மாநாடு நன்னிலம் ஒன்றியம் பேரளத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.முகமது சலா வுதீன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசந்திர போஸ் துவக்க உரையாற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் ஆகி யோர் வாழ்த்துரையாற்றினர். முன்னதாக தியாகிகள் நினைவாக கொண்டு வந்த கொடி மரத்தில் சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவரும், சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஜெயசீலன் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு வேலை அறிக்கையை முன்வைத்தார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா புதிய நிர்வாகிகளை அறி வித்து நிறைவுரையாற்றினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி களில் அடிப்படை கட்டுமானப் பணிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரி யர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருவாரூர் மாவட்டத் தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை காவல்துறை உதவியோடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கூடுதல் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள விவ சாய வளங்களை பாதுகாக்கும் வகை யில், தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் மாவட்டத் தலைவ ராக ஏ.கே.வேலவன், மாவட்டச் செயலா ளராக எஸ்.முகமது சலாவுதீன், பொரு ளாளராக எம்.டி.கேசவராஜ், துணைத் தலைவர்களாக எம்.சதீஷ், எம்.எஸ்.ஜெய்கிஷ், துணைச் செயலாளர்களாக பா.விஜய், எஸ்.சுரேந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.