districts

வீணாக கடலில் கலக்கும் மழைநீரை கரூர் மாவட்ட ஏரிகளில் நிரப்ப வேண்டும் வாலிபர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

கரூர், ஆக.8 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு உழவர் சந்தை அருகே  உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜி.பார்த்திபன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி, மாநில குழு உறுப்பினர் கே.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஏ.சசிகுமார் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் கே.ராஜா வரவு-செலவு அறிக்கையையும் முன் வைத்தனர்.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக கே.ராஜா, மாவட்ட செயலாளராக ஜி.பார்த்திபன், மாவட்ட பொருளாளராக ஏ.சசிகுமார், மாவட்ட துணைத் தலைவராக சுரேஷ், மாவட்ட துணை செயலாளராக பிரகாஷ் உட்பட 20 பேர்  கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குளித்தலை அரசு மருத்துவ மனையை கரூர் மாவட்ட தலைமை அரசு  மருத்துவமனையாக தொடர்ந்து நடத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, அம ராவதி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம் பாளையம், பஞ்சப்பட்டி, வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் நிரப்பிட நட வடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள தரிசு நிலங்கள் விவ சாய நிலங்களாக மாறி விவசாயம் பெரு கும். கரூர் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.