districts

பள்ளி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: தஞ்சையில் 94.69 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், ஜூன் 21 -  தமிழகத்தில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 பொது தேர்வு தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தஞ்சா வூர் மாவட்டத்தில் 107 மையங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வை 12,686 மாணவர்களும், 14,620 மாணவிகளும் என மொத்தம் 27,306 மாணவ-மாணவிகள் எழுதினர். திங்கள்கிழமை காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. இதில் மாண வர்கள் 92.14 சதவீதமும், மாணவிகள் 96.90 சதவீதமும், மொத்தம் சராசரியாக 94.69 சத வீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள் ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில் காசாங் காடு, ஆவணம், மணக்காடு, மருங்குளம், ஒக்க நாடு கீழையூர், வடசேரி, ஈச்சங்கோட்டை, பொன்னாப்பூர், பூண்டி, பின்னையூர், நீலத்த நல்லூர், இலுப்பைதோப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், தஞ்சாவூர் பார்வையற்றோர் அரசு பள்ளி, தஞ்சாவூர் அரசு காது கேளா தோர் பள்ளி என 14 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதேபோல் தனியார் பள்ளிகளில் பட்டுக் கோட்டை கல்வி மாவட்டத்தில் 17 பள்ளி களில் 11 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள் ளன. மேலும், கும்பகோணம் கல்வி மாவட் டத்தில் 30 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100 சத வீத தேர்ச்சியும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத் தில் 24 பள்ளிகளில் 14 பள்ளிகளும், ஒரத்த நாடு கல்வி மாவட்டத்தில் 9 பள்ளிகளில் 7  பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

10 ஆம் வகுப்பு
மாவட்டத்தில் மொத்தம் 30,540 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 28,047 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, தேர்ச்சி விகிதம்  91.84 சதவீதம் ஆகும். இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 4.08 சதவீதம் குறைவு. தேர்வு எழுதிய 15,344 மாணவர்களில் 87.52 சதவீதத்தினரும், 15,196 மாணவி களில் 96.20 சதவீதத்தினரும் தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.68 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ள னர். ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 78.11 சத வீதம், மாநகராட்சிப் பள்ளிகளில் 87.38 சத வீதம், நகராட்சிப் பள்ளியில் 68.42 சதவீதம், முழு உதவி பெறும் பள்ளிகளில் 87.24 சத வீதம், அரசுப் பள்ளிகளில் 89.31 சதவீதம், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 93.90 சத வீதம், சுய நிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.10 சதவீதம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ்  இயங்கும் சுயநிதிப் பள்ளிகளில் 96.69 சத வீதம், சமூக நலப் பள்ளிகளில் 100 சதவீத மும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பார்வையற்றோர் பள்ளி சாதனை
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள அரசுப் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி யில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 22 மாணவர்கள், 5 மாணவிகள் என 27  பேரும் தேர்ச்சியடைந்து 100 சதவீதம் தேர்ச்சி  என்ற சாதனையைப் படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி  பெற்று வருகிறது. மாவட்டத்தில் பார்வையற்ற  மாணவர்களில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு  எழுதிய 40 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல, தஞ்சாவூர் மேம்பாலம் பகுதி யில் உள்ள அரசுக் காது கேளாதோர், வாய்  பேச இயலாதோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20  மாணவர்கள், 9 மாணவிகள் என அனை வரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

பிருந்தாவன் பள்ளி
பட்டுக்கோட்டை அருகே உள்ள சுக்கிரன் பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஆர்.மனோ பாலாஜி 593 மதிப்பெண்களுடன் முதல்  இடத்தை பெற்றார். மாணவி ஆ.ராஜகனிகா 592 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடத்தை யும், ஸ்ரீ பாலாஜி, பி.சிவநேசன், பி.அமிர்தா ஸ்ரீ ஆகியோர் 587 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும், மாணவி சி.மஞ்சரி 586  மதிப்பெண்களுடன் 4 ஆம் இடமும் பெற்றனர்.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 442 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  10-ஆம் வகுப்பு தேர்வில் கே.பி.என்.  தினேஷ்குமரன் 484 மதிப்பெண்கள் பெற்று  முதல் இடம், எஸ்.பிரபா, வி.ஹரிணி ஆகி யோர் 480 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம்  இடம், என்.சுதந்திர பைரவி 479 மதிப் பெண்கள் பெற்று 3-ஆம் இடத்தை பெற்றனர். 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 194 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி யின் தாளாளர், இயக்குனர், தலைமையாசிரி யர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மூவேந்தர் பள்ளி 
பேராவூரணி அருகே செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100  சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள் ளனர். பள்ளி மாணவி மு.நஸ்ரீனா பர்வீன் 586 மதிப்பெண்களும், சா.ஆதவ் நித்திஷ் குமார், சு.ஹரிசுதா ஷர்மா ஆகியோர் 577 மதிப்பெண்களும், இரா.சுகன்யா 564 மதிப் பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களை  பெற்றனர்.  இதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி  க.அட்சயா 493, ஜெ.இனியா 492, ரா.தேவ காஞ்சனா 490 மதிப்பெண்கள் பெற்று முறையே  முதல் மூன்று இடங்களை பெற்றனர். சாதனை  படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.ஏ.டி. சாமியப்பன், செயலாளர் இ.பி. ஏகாம்பரம், பொருளாளர் இரா.வேலுச் சாமி, முதல்வர் கணேசன் மற்றும் அறங்காவ லர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 137 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத  தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவன் கு.கோபி 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாநில அள வில் சிறப்பிடம் பெற்ற மாணவன் கு.கோபியை  பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் மற்றும்  ஆசிரியர்கள் பாராட்டினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
மன்னார்குடி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மன்னார்குடி அசோகா சிசுவிஹார் மெட்ரிக்  பள்ளி மீண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள் ளது. இப்பள்ளியின் என்.பி.சஹானா 500-க்கு  484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஆர்.அசின் 483 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஏ.ஹரிணிதா 469  மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை யும் பெற்றுள்ளனர். உயர்நிலைப் பள்ளி கல்வி யில் வெற்றி பெற்ற இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.ஜி.வெங்கடராஜன், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.