பேராவூரணி, ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், தலைவர் கௌதமன் தலைமையில் நடை பெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா தேவி வர வேற்றார். பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபிபா பாருக், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜசீரா, தொண்டு நிறு வனப் பிரதிநிதி ஜகுபர்அலி, நெடுவாசல் ராம்குமார் ஆகி யோர் பேசினர். பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும். 2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் மாண வர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள 5 வயது பூர்த்தி யடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.