கும்பகோணம், ஆக.10 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநில மாநாடு மார்த்தாண் டத்தில் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடை பெறுவதையொட்டி குடியாத்தம் முதல் குமரி வரை தேசிய கொடி பயண வரவேற்பு விழா கும்பகோணம் காந்தி பார்க் அருகில் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்றது. வரவேற்பு விழாவிற்கு சிஐடியூ கண்ணன், சபதி வித்யாசங்கர், பழ. அன்பு மணி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாவட்ட குழு உறுப்பி னர் கவிஞர் மா.சுதா வரவேற்புரை ஆற்றி னார். தேசிய கொடியை வரவேற்று கும்பகோணம் மாநகர மேயர் சரவணன், துணை மேயர் சுப. தமிழழகன், தமுஎகச மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் கொடி பயண நோக்கத்தை விளக்கிப் பேசினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாநில குழு உறுப்பினர் ரஜினி சுரேந்திரன், மாநகர மாமன்ற உறுப்பி னர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். வாலிபர் சங்க பொறுப்பாளர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.