districts

img

தமிழ்ப் பல்கலை.யில்  புத்தாக்கப் பயிற்சி

 தஞ்சாவூர், ஜூன் 9-  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையுடன் உரையாசிரி யர் பார்வையில் சங்க இலக்கியம் என்னும் தலைப்பில் ஜூன் 8 முதல் 21 வரை 14 நாட்கள் புத்தாக்கப் பயிற்சியினை நடத்துகிறது.  இதன் தொடக்க விழா, தமிழ்ப் பல்கலைக்கழக பனுவல் அரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவரும், இப்புத்தாக்கப் பயிற்சி நிகழ்வின் இயக்குநருமான பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.  தஞ்சாவூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதியரசர் பி.இந்திராணி, தமிழ்ப் பல்கலை பதிவாளர் முனைவர் க.சங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் முதுமுனைவர் இராம. கதிரேசன் பங்கேற்றுப் பேசினார்.  தமிழ்ப் பல்கலை மொழியியல் துறை உதவிப் பேராசிரி யரும், இப்புத்தாக்கப் பயிற்சி நிகழ்வின் இணை இயக்குநரு மான முனைவர் கி.பெருமாள் நன்றி கூறினார்.  தமிழ்ப் பல்கலை முனைவர் பட்ட ஆய்வாளர் ப.செந்தில் முருகன், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் கு.சின்னப்பன்,  துணைப்பதிவாளர் கோ.பன்னீர் செல்வம், கல்விநிலை ஆய்வு இயக்கத்தின் இயக்குநர் முனைவர் ஜெ.தேவி, சுவடிப்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் த.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.