தஞ்சாவூர், அக்.12 - மறைந்த இந்திரா சுகுமாரன் உருவப் படத்திறப்பு தஞ்சையில் நடைபெற்றது. தியாகி என்.வெங்கடாசலத்தின் மரு மகளும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநில துணைத்தலைவர் பேரா. முனை வர் வெ.சுகுமாரனின் மனைவியுமான இந்திரா சுகுமாரன் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். அவருடைய படத்திறப்பு, தஞ்சாவூர் காவேரி நகர், சுந்தர் மகாலில் புதன்கிழமை நடைபெற்றது. சிபிஎம் முதுபெரும் தலை வரும், மக்களவையின் முன்னாள் உறுப்பின ருமான டி.கே.ரெங்கராஜன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். இதில், திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திரு வையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பூதலூர் ஒன்றியக் குழு தலைவர் கல்லணை செல்லக் கண்ணு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ. நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, சந்திரகுமார், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்டச் செயலாளர் வைகறை, அயனா புரம் முருகேசன், காங்கிரஸ் கட்சி குணா, கல்வியாளர் புனிதா கணேசன், மருத்துவர் கள் ராதிகா மைக்கேல், மைக்கேல், திமுக பொதுக்குழு உறுப்பினர் து.செல்வம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்லூரி பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அனைத்து கட்சி, இயக்கத்தினர் இந்திரா சுகுமாரன் உருவப்படத் துக்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.