தஞ்சாவூர், பிப்.8 - தஞ்சை மாநகராட்சி 36 ஆவது வார்டு பகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், அரிவாள்-சுத்தியல்-நட்சத் திரம் சின்னத்தில் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் இ. வசந்தி, திமுக பகுதிச் செய லாளர் சரவணன் தலைமை யில் வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது, ‘’அடித்தட்டு மக்கள் வாழும் இப்பகுதி யில், பொதுமக்களின் அடிப் படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடு வேன். லஞ்சம் - ஊழ லுக்கு இடம் தராத வகை யில் நேர்மையாக செயல்படு வேன். மாநகராட்சி உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்டால் மக்களை தினசரி சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வேன்” என வாக்குறுதி அளித்தார். அவருடன் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் பி.செந்தில்குமார், ஆர்.கலைச்செல்வி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் என். குருசாமி, களப்பிரன், ஜி.அர விந்தசாமி, மாநகரச் செய லாளர் எம். வடிவேலன், முன்னாள் நகர்மன்ற உறுப்பி னர் த.முருகேசன், மாநகரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டனர்.