தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவி ரமடைந்துள்ளது. இதனால் இடைவிடாது பெய்த மழை யால் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் என 17 வீடுகள் இடிந்து சேதமாயின. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தை சேர்ந்த கலா, மாரியம்மாள், ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த தங்க வேல், ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரம் மூனுமாங் கொல்லை தெருவைச் சேர்ந்த ராஜா, அருமுளை கிராமத்தை சேர்ந்த நட ராஜன் மற்றும் இளஞ்சி யம், பேராவூரணி தாலுகா அடைக்கத்தேவன் கிரா மத்தை சேர்ந்த ரத்தினம், பாப நாசம் தாலுகா ஒன்பத்து வேலி நாகலூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன், கணேசன், அன்னப்பன் பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த ராபின்சா, திருவிடைமருதூர் தாலுகா நரசிம்மன்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த திவ்யாராஜ், பந்தநல்லூரை சேர்ந்த நடராஜன், பாப் பாக்குடியை சேர்ந்த புக ழேந்தி, மேலக்காட்டூரை சேர்ந்த அனுஸ்கா, சித்ரா ஆகியோரின் குடிசை வீடு கள் பகுதி அளவும், சர போஜிராஜபுரம் விளத் தொட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தியின் குடிசை வீடு முழு மையாகவும் இடிந்து விழுந் துள்ளன. பேராவூரணி தாலுகா ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமியின் ஓட்டு வீடு பகுதி அளவு இடிந் துள்ளது. வீடுகள் இடிந்து விழுந்தததில் பெரிய அள வில் யாருக்கும் எவ்வித சேத மும் ஏற்படவில்லை. மேலும், அடைக்கத்தேவன் கிரா மத்தை சேர்ந்த ரத்தினம் வளர்த்து வந்த ஆடு ஒன்று உயிரிழந்தது.