districts

ரெட்டவயலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர கோரிக்கை

தஞ்சாவூர், செப்.23 -  ரெட்டவயல் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு அஞ்சல் மூலமும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமாரை நேரில் சந்தித்தும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில், “ரெட்டவயல் ஊராட்சி சுற்றுவட்டாரத்தில், மணக்காடு ஊராட்சி, ருத்திரசிந்தாமணி ஊராட்சி, விளங்கும் ஊராட்சி, கொளக்குடி ஊராட்சி என இந்த ஊராட்சிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அருகில் உள்ள கிரா மங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள்.  அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஊமத்த நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வ தென்றால் இரண்டு பேருந்துகள் ஏறிச் செல்ல  வேண்டும். அவசரமாக செல்ல வாகன வசதி யும் கிடைக்காது.  அப்படி அவசரமாக அருகில் உள்ள பெருமகளூர் ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு சென்றால், இங்கு போதிய வசதி இல்லை என சொல்லி விடு கின்றனர். பிரசவம், விஷக்கடி உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்காக பேராவூரணி அல்லது அறந்தாங்கி செல்ல வேண்டி உள்ள தால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.  மேலும், ரெட்டவயலில் அரசுடைமை வங்கி, விளையாட்டு மைதானம் அமைத்து தர  வேண்டும். அரசு நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர  வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.