தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப் புகள் சார்பில் ‘‘நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்’’ என்பதை வலி யுறுத்தி பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்வுகள், மார்ச் 8 முதல் தஞ்சாவூர் மாவட் டத்தில் பல்வேறு பகுதிக ளில் நடைபெற்று வரு கின்றன. இதனொரு பகுதியாக, இந்தியன் ரெட்கிராஸ் சொ சைட்டி, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மாணவ, மாணவி யர்களுக்கு பல்வேறு போட்டிகளை, தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மகாலில், மார்ச் 13 அன்று பேச்சுப்போட்டி, 14 அன்று ஓவியப்போட்டி, 15 அன்று வினாடி வினாப் போட்டி, 16 அன்று சிறு நாட கப் போட்டி, 17 அன்று கழிவு களைக் கலை ஆக்கும் போட்டிகள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகின்றன. போட்டிகள் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகளு க்கு ஒரு பிரிவாகவும், கல் லூரி மாணவ, மாணவிகளு க்கு ஒரு பிரிவாகவும் நடை பெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகள் தங்கள் அடையாள அட்டையுடன் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9443134144, 9894030046, 9942456228 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறிய லாம். போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு தஞ்சை யை நெகிழி மாசில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.