தஞ்சாவூர், டிச.18- சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த கல்வி உதவித் தொகையை, ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியதைக் கண்டித்து, தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சாவூர் மாநகரம் சார்பில், தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரத் தலைவர் எம்.கோஸ்கனி, நிர்வாகி ஏ.ஆர்.சேக் அலாவுதீன், ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜைனுல் ஆபிதீன், தமுமுக மாநில அமைப்பாளர் ஐ.எம்.பாதுஷா, இசிஐ சர்ச் சூசை பால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாந கரச் செயலாளர் ஜெ.சரீப், அறநெறி மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வி. ஆரோக்கிய சார்லஸ், மாவட்டச் செயலாளர் எக்ஸ்.அருள்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் பி.எம்.காதர்உசேன், மாவட்டப் பொரு ளாளர் எஸ்.ஞானமாணிக்கம், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சிபிஎம் கிளைச் செயலாளர் கருணாநிதி, மாநகரக் குழு உறுப்பினர் கரிகாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகையை நிறுத்தாமல் வழங்க வேண்டும். சிறுபான்மை யின ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது. சிறுபான்மை யின மக்களுக்கு குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். அவர்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும். சிறுபான்மையின ருக்கு வழங்கும் சிறு கடன்களை சொந்த ஜாமினி லேயே வழங்க வேண்டும். தமிழக சிறைச்சாலை களில் சட்டத்துக்கு புறம்பாக நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசி களை விடுதலை செய்ய வேண்டும். டிசம்பர் 18 சர்வதேச சிறுபான்மையின உரிமை தினத்தில் மாவட்ட ஆட்சியரால் கூட்டப்படும் கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு விற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.