தஞ்சாவூர், ஏப்.9 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 36 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, முதல் முறை யாக ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் கார ணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலை யில், ஜனவரி 26 முதல் 3 மாதங்கள் தொடர்ந்து ஆன்-லைன் மூலம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதில் 500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, அகத்தியம் அறக்கட்டளை யும் இணைந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இதில் கலந்து கொண்ட 300 அரசுப் பள்ளி மாணவர்களில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட் டத்தை சேர்ந்த, பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாண விகளும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ களும் என மொத்தம் 36 பேர் பயிற்சியில் ஈடு பட்டு வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்நிலைத் தேர்வுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளிடம் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ், பிரம் மோஸ் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.சிவ தாணுப்பிள்ளை ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி கோகுல், இந்தோ-ரஷியன் தூதர் தங்கப்பன், அகத்தி யம் அறக்கட்டளை பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக, பல்வேறு நிலைகளைக் கடந்து, தேர்வு செய்யப்படும், அரசுப் பள்ளி மாணவர்கள், நிறைவாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பட்டுக் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை எஸ்.சத்யா, வழிகாட்டு ஆசிரியராக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வி.ஓவிய அரசன் ஆகியோர் செயல்பட்டனர்.