districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி கழுமங்குடா ஐஸ்வாடி மீனவ மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர், மே 13 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக கழுமங்குடா ஐஸ்வாடி பகுதியை ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அப்பகுதியில் குடி இருந்து வருப வர்களுக்கு மின் இணைப்பு வழங்க  தேவையான நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மரக்கா வலசை ஊராட்சிக்கு உட்பட்டது கழு மங்குடா ஐஸ்வாடி மீனவக் கிராமம். இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளர் குடும்பத்தினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லா மல் தவித்து வந்தனர். இதுகுறித்து, கடந்த மே 6 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் ‘மின் வசதி இன்றி தவிக்கும் 30 குடும்பங்கள்; நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்’ என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியாகியிருந்தது.  அங்கிருந்த பொதுமக்கள் செல் போன் சார்ஜ் போட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று, காசு கொடுத்து சார்ஜ் போட வேண்டும். எங்கள் பிள்ளைகள் டிவி பார்த்தது இல்லை. கொரோனா பேரிடர் காலங்களில் ஆன்லைன் வகுப்பும் படிக்க முடியவில்லை. மண் ணெண்ணெய் விளக்கு வெளிச்சத் தில் குழந்தைகள் படிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவலையுடன் தெரிவித்திருந்தனர்.  இப்பகுதி மக்களுக்கு, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சியர் ஆய்வு 
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அப்பகுதியில் பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் (பொ) ஐவண்ணன், பேராவூரணி வட்டாட்சி யர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு  மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த  சிபிஎம் கிளைச் செயலாளர் நாகேந்தி ரன் மற்றும் பொதுமக்கள், “அடிப் படை வசதி, மின்சார வசதி இல்லாமல்  பல வருடங்களாக தவித்து வருவது குறித்து முறையிட்டனர். மேலும், தங்கள் பிள்ளைகள் படிக்க மின் வசதி செய்து தரவேண்டும்” என அங்கிருந்த பெண்கள் ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்த னர்.  அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர், “செய்தித்தாள்களில் வந்த  செய்தி அடிப்படையில் நானே உங்களை தேடி இங்கு வந்துள் ளேன். உங்களுக்கு விரைவில் மின்  வசதி ஏற்படுத்தி தரப்படும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்க ளுக்கு தேவையான அனைத்து வசதி களையும் செய்து தருமாறு முதல மைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள் ளார் என உறுதியளித்ததுடன், இந்த இடத்திற்கு மின்சார வசதி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.