districts

கனரக வாகனங்களுக்கான ஆன்-லைன் அபராதத்தை முறைப்படுத்தக் கோரிக்கை

பட்டுக்கோட்டை, ஜன.24-  கனரக வாகனங்க ளுக்கு ஆன்-லைன் அபரா தங்களை தவறாக விதிப் பதை முறைப்படுத்துவது தொடர்பாக, பட்டுக் கோட்டை நகரம் மற்றும்  வட்டார லாரி உரிமையா ளர்கள் நலச்சங்கம் சார்பில், காவல்துறை துணை கண்  காணிப்பாளரிடம் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஆர்.போஜராஜன், செயலாளர் என்.நாடிமுத்து, பொருளாளர் என்.ஆர்.சர வணன் மற்றும் லாரி உரிமை யாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  “கனரக வாகனங்க ளுக்கு ஆன்-லைனில் அப ராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் பங்குகள், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாக னங்கள், சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்க ளின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு, குற்றம் என்ன என்று கூறா மல், ‘பொதுவான குற்றம்’  என அபராதம் விதிக்கப்படு கிறது. மேலும் ஒப்பந்த அடிப்ப டையில், வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழ கத்தில் அபராதம் விதிக்கப் படுகிறது.  சாலை விதிகளை பின்  பற்றவில்லை. சீட் பெல்ட்  அணியவில்லை. தலைக்கவ சம் அணியவில்லை போன்ற முரணான காரணங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்படும்  அபராதங்களால், வாகன உரிமையாளர் காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பெர் மிட் பெறுவதில் மிகுந்த சிர மத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற ஆன்-லைன் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் உள் ளிட்டவற்றை சரி பார்த்து, குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும் பட்சத்தில் வாகன  ஓட்டுநரின் கையொப்பத்து டன், என்ன குற்றம், ஓட்டு நர் பெயர், ஓட்டுநர் உரிமம் எண்ணையும் ரசீதில் குறிப்  பிட வேண்டும். இம்மாதிரி யான ஆன்-லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.