தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சை பாரத் கேட்டரிங் கல்லூரியில் ‘‘குக் கிங் ஆஃப் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சமையல் கலைஞருக்கான தேடல்’’ என்ற தலைப்பில் சமையல் போட்டிகள் நடைபெற்றன. பாரத் கல்விக் குழுமச் செயலாளர் புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் செப் விஜய் ஆனந்த ராஜ், இன்டியன் இன்ஸ்டிடியூட் முதல்வர் முத்துக்கிருஷ்ணன், துணை முதல்வர் கவிதா, நிர்வாக அலுவலர் அன்பழகன், பாரத் கல்லூரி இயக்குநர் வீராசாமி மற்றும் முதல்வர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.