districts

காத்திருப்புப் போராட்ட அறிவிப்பு எதிரொலி தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்ற அரசு அதிகாரிகள் உத்தரவாதம்

தஞ்சாவூர், மார்ச் 12-  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம்  பவனமங்கலம், காலனித்தெரு குடி யிருப்புப் பகுதியில் வீட்டின் கூரை மீதும்,  கட்டடத்தின் மீதும் உயிருக்கு ஆபத்தான  நிலையில் தாழ்வாகச் சொல்லும் மின்  கம்பிகளை அகற்ற வேண்டும். பவனமங்க லம் பிரதான சாலையிலிருந்த  பேருந்து நிழற்குடை இடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிதாக கட்டப்படவில்லலை. பவனமங்கலம் மாதா கோவில் தெரு விற்கு செல்லும் சாலையை தார்ச்சாலை யாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியம், சிபிஎம் பவனமங்கலம் கிளை மற்றும் பொதுமக்கள்  சார்பில் இன்று (திங்கள்கிழமை) பூதலூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்  டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டி ருந்தது.  இந்த நிலையில் பூதலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பெர்சியா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  காவல் உதவி ஆய்வாளர் நெடுஞ்செழி யன், திருக்காட்டுப்பள்ளி உதவி மின் பொறியாளர், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பி னர் பி.எம்.இளங்கோவன், கே.காந்தி,  ஒன்றிய செயலாளர் எம்.ரமேஷ், நிர்வாகி கள் பி.முருகேசன், ஆர்.உதயகுமார், சி. சிவசாமி மற்றும் பவனமங்கலம் மக்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், “தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் உடனடியாக மாற்றி அமைக்கப்படும். சட்டமன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதியிலிருந்து பழுதடைந்த நிழற்குடை கட்டித் தரப்படும். சாலையும் விரைவில் அமைத்துத் தரப்படும் என அர சுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.  இதை யடுத்து  சாலை மறியல் கைவிடப்பட்டது.