தஞ்சாவூர், செப்.5 - தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழக வளாகத்தில் 10 ஆயிரம் பனை விதை கள் நடும் நிகழ்வை துணை வேந்தர் வி.திருவள்ளுவன் ஞாயிறன்று துவக்கி வைத்தார். கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் சார்பில் தமி ழகம் முழுவதும் சாலையோ ரங்கள், கோயில் வளாகங் கள், பொது இடங்களில் மரன் கன்றுகள் நட்டு பராமரித்தல், பனை விதைகளை சேக ரித்து, பனை விதைகள் நடு தல் ஆகிய நிகழ்ச்சிகளை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதையடுத்து, தஞ்சா வூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் துக்கு சொந்தமான 824 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் சொற்ப எண்ணிக் கையில் பனை மரங்கள் இருப்பதால், அதனை அதிகப் படுத்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழர் களின் பாரம்பரிய மரங்க ளில் ஒன்றான பனை மரங் களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் 10 ஆயிரம் பனை மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய் தது. அதன்படி, ஞாயிறன்று பல்கலைக்கழக வளாகத் தில், பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட மாண வர்கள் பனை விதைகளை பதியமிடும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர். இந்நி கழ்ச்சிக்கு தலைமை வகித்து பனை விதைகளை பதிய மிட்டு பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளு வன் உரையாற்றினார். 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பனை விதை களை நடும் பணியில் ஈடுபட்ட னர்.