தென்காசி மாவட்டம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் இருந்து விவசாய வேலைக்காக ஆனைகுளம் பகுதிக்குத் தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர். லோடு ஆட்டோ சுரண்டை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கோ நாய் வந்துள்ளது. இதை அடுத்து ஒட்டுநர் ஆட்டோவை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாடை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் இருந்த ஜானகி(52), வள்ளியம்மாள்(60), பிச்சி(60) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 12 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.