districts

img

இரண்டாக பிளந்த சாலை: மக்கள் அச்சம்

சீர்காழி, நவ.22 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே பனங்காட்டங்குடி கிரா மத்திலிருந்து மாதிரவேளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை யாக மேம்படுத்தப்பட்டு ஒன்றரை வருடம் ஆகிறது.  இந்த சாலையின் வழியே சீர்காழியிலிருந்து பனங்காட்டங்குடி, வட ரங்கம், பாலூரான்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியே மாதிரவேளூருக்கு கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு புதிதாக அரசு பேருந்து இயக்கப்பட்டது. மேலும், கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அப்பகு தியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்து போன்ற வற்றின் மூலம் சென்று கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் ஞாயி றன்று பனங்காட்டாங்குடியி லிருந்து மாதிரவேளூர் செல்லும் இந்த சாலையில், அரசடிபாலம் அருகே சாலை இரண்டாகப் பிளந்தது போல், சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது. இதில் இச்சாலை பாதி யாக பிளந்துள்ளது. இதே போன்று வாடி கிராமத்தி லும் 50 மீட்டர் தூரத்துக்கு சாலை நடுவே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.  சாலையின் நடுவே திடீரென ஏற்பட்டுள்ள வெடிப்பால், இவ்வழியே செல்பவர்கள் மிகுந்த அச்சத் துடன் சென்று வருகின்றனர். எந்நேரமும் இந்த சாலை யில் உடைப்பு ஏற்பட்டு விபத்து நேரிடும் என்ற அச்சம் அப்பகுதி மக்களி டத்தில் உள்ளது. இத னால் அப்பகுதியில் சென்று வரும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போ தைய சூழலில் இரண்டாகப் பிளந்த இச்சாலை மேலும் பிளந்து பெரும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. பாதுகாப்புக் கருதி அப் பகுதி மக்கள் எச்சரிக்கை யாக செல்ல வேண்டும் என உணர்த்துவதற்காக, அங்குள்ளவர்களால் சாலையின் நடுவே மண் மூட்டைகள் வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.