districts

img

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் ஏற்றம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை (அக்.17) கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதனால், மீனவர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.