இராஜபாளையம், பிப்.9- இராஜபாளையம் ஒன்றியத்திற்குட்ட மேலராஜகுலராமன் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான அய்யனாபுரத்தில் மழைநீர் செல்லும் ஓடை மணல் சரிந்து மூடப்பட்டி ருந்தது. முறையாக தண்ணீர் செல்வதற்கு வசதியாக ஓடையில் தூர்வாரி அதில் வாறு கால் கட்டக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.இதன்பின்னர் ஓரளவிற்கு தண்ணீர் செல்கிற வகையில் ஓடை தூர்வாரப்பட்டது. ஆனால் சிபிஎம் மற்றும் பகுதி மக்கள் கூறியது போல் முழுமையாக தூர்வாரவும் இல்லை, வாறுகால் முறையாக கட்டவும் இல்லை. இந்நிலையில் சிபிஎம் தலைமை யில் அய்யனாபுரம் பகுதி மக்கள் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுதிரண்டு ராஜ பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமையன்று காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் நடப்பது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் இடத்தை பார் வையிடுவது என்று முடிவு செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து சிபிஎம் தலை வர்களுடன் இடத்தை ஒன்றிய குழு தலை வர் பார்வையிட்டார். பின்னர் சிபிஎம் தலை வர்களிடம் வியாழக்கிழமையன்று பணிகள் உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்துவிட்டு சென்றார். அவர் கூறியபடி வியாழன் அன்று பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து சிபிஎம் ஒன்றிய செயலா ளர் முனியாண்டி கூறுகையில், ஒன்றியக் குழு தலைவர் சிங்கராஜ் கூறியபடி பணி கள் துவங்கவில்லை. மீண்டும் சிபிஎம் தலைமையில் அய்யனாபுரம் மக்களை திரட்டி பிப்ரவரி 15ஆம் தேதி மறியல் போரா ட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.