districts

திருவில்லிபுத்தூர் அருகே  கார் கவிழ்ந்து ஓட்டுநர் பலி  

திருவில்லிபுத்தூர், பிப்.25-  இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முதலியார் வடக்கு தெருவில் வசிப்பவர் தொழிலதிபர் குற்றாலக் கனி (வயது 30). இவரும் இவரது உறவி னரான வெங்கடேஷ் (வயது 40) ஆகிய இருவரும் காரில்  கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டு புதுமனை புகு விழாவிற்கு சென்றனர்.பின்னர்  நள்ளிரவில் திரு வில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தனர். காரை தளவாய்புரம் செட்டியார் பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மாரிமுத்து (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார்.   நத்தம் பட்டி அருகே வரும்போது திடீரென்று சாலையோரம்  இருந்த பள்ளத்தில் கவிந்தது. இதில் ஓட்டுநர் மாரி முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றாலக் கனி  வெங்கடேஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து நத்தம்  பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.